ஏப்ரல் 21 தாக்குதலால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறை விடுதிகளை விரைவில் கட்டியெழுப்பும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட சில நிறுவனங்களுக்கு சலுகை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.
இதனடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட சில சுற்றுலாத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 26 பில்லியன் கடனை காலம் தாழ்த்தி திருப்பி செலுத்துவது தொடர்பாக ஆராயப்படுவதாக அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதலால் 62 பில்லியன் வரையிலான இழப்பீடுகள் ஏற்பட்டுள்ளது. இதனடிப்படையில் கடன் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த தொகையில் 26 பில்லியன் ரூபாயினை காலம் தாழ்த்தி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மே மாதம் மேற்கொண்டுள்ளது.
வர்த்தக வங்கிகளுக்கு 1055 கடன் பெற்றோரிடம் இருந்து 62 பில்லியன் தொகை நிவாரணமாக கோரப்பட்டுள்ளது என மத்திய வாங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நிவாரணம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளபப்ட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க