உள்நாட்டு செய்திகள்புதியவை

வைத்தியர் சாஃபி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை!

வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் எதுவும் இல்லையென சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.

குறித்த குழு விசாரணைகள் அனைத்தையும் நிறைவு செய்துள்ள நிலையில், அறிக்கை ஒன்றின் ஊடாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றை தடுக்கும் எந்த சிகிச்சைகளையும் அவர் செய்தமைக்கான ஆதாரம் இல்லையென்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர் சாஃபியிடம் சிகிச்சை பெற்ற பிறகு மகப்பேறு பாதித்துள்ளதாக பல பெண்கள் முறைப்பாடு செய்திருந்தாலும் அவர்கள் பரிசோதனைக்கு முன்வர தயங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட விஷேட குழு மேற்கொண்ட குறித்த அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி குருணாகல் நீதிமன்றத்தில் வைத்தியர் சாஃபி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க