அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருசிலர் அடுத்தவாரமளவில் மீண்டும் பதவியேற்ககூடும் என தெரியவருகின்றது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் 18 ஆம் திகதி முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் கொழும்பில் கூடவுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.
மகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை உட்பட மேலும் சில காரணங்களை கருத்திற்கொண்டே முன்னர் எடுத்த முடிவை மீள்பரிசீலனை செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் தொடர்பை பேணிய ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி அத்துரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார்.
இதையடுத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக இராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க