பண்டாரவளை எல்ல பகுதியின், இராவண எல்ல அரச வனப்பகுதியில் குப்பைகளை எரிவதால் சூழல் மாசடைவதோடு நுளம்புகளும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
உணவு பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை சூழலில் வீசியெரிந்துவிட்டு செல்வதால், பாரிய அசௌகரியங்களுக்குள்ளாவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பறவைகள் மற்றும் விலங்குகள் உணவை அப்பகுதியில் பரப்புவதன் மூலம் சூழல் மாசடைவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் யோகட் கோப்பைகள், பொலித்தீன் பைகள் ஆகியவற்றில் நீர் நிறைந்து நுளம்பின் பெருக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கின்றது. பிரதேசத்தில் துர்நாற்றமும் வீசுகிறது.
எனவே , இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க