கொழும்பில் சிங்கள மாணவா்களுக்கு தமிழ் கற்பிக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்து பௌத்த கலாசார பேரவையில் 2ஆம் மொழி கல்வியை நிறைவு செய்த மாணவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இந்து சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளது. இந்து ஆலயங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்படுகின்றது. அவற்றை அகற்றுவதற்காக நீதிமன்றம் செல்ல தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
அத்துடன், தலதா மாளிகை தாக்கப்பட்டபோது இந்து கோவில்களை பௌத்தர்கள் தாக்கவில்லை. 83 கலவரம் நடைபெற்ற காலத்திலும் கூட இந்து கோவில்களை தாக்கவில்லை. தாக்கவேண்டும் என நினைக்கவும் இல்லை என அத்துரலிய ரத்ன தேரர் கூறினார்.
கருத்து தெரிவிக்க