உள்நாட்டு செய்திகள்புதியவை

தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்களுக்கான அரச விருது விழா -2019க்கான விண்ணம் கோரல்!

“தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள், கலைஞர்களுக்கான அரச விருது விழா – 2019”, என்ற தலைப்பில் தமிழ் கலைஞர்களுக்கு விருதுகளையும், மறுக்கப்படும் அங்கீகாரத்தையும், பணப்பரிசில்களையும் வழங்கவுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய மற்றும் நவீன தமிழ் கலைகளை ஊக்குவிக்கும் அரச விருது விழாவை நடத்துவிக்க தனது அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும், இந்த விருது விழாவில் விருதுகளை பெற நாடெங்கும் கலைப்பணியாற்றும் தமிழ் கலைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வருடாந்தரீதியாக நடத்துவிக்க தீர்மானிக்கபட்டுள்ள இந்த தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைஞர்களுக்கான அரச விருது விழாவின், இவ்வாண்டுக்கான விருது விழா அகஸ்ட் 24ஆம் திகதி கொழும்பில் கோலாகலமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இவ்விழாவை நடத்தும் பொறுப்புகளை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சின் இந்து சமய கலாச்சார திணைக்களத்திற்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எழுத்து, பாடல், வாத்தியம், நாட்டியம், அறிவிப்பு, நெறியாள்கை, புகைப்படம், சினிமா, கிராமியக்கலைகள், சிற்பம், நுண்கலைகள் ஆகிய மற்றும் இங்கே சொல்லப்படாத அனைத்து கலைத்துறைகளையும் சார்ந்த, 18 வயதிற்கு குறையாத அனைத்து மூத்த, நடுத்தர, இளம் தமிழ் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பதாரிகளுக்கு வயது உச்ச வரம்பு கிடையாது.

இந்த விழாவிற்கான விண்ணப்பங்களை, கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சு தலைமையகம், கொழும்பு பம்பலபிட்டியில் அமைந்துள்ள இந்து சமய கலாச்சார திணைக்களம், பிராந்திய அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் www.hindudept.gov.lk எனும் தளத்திலும், சமூக ஊடகங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

இதன்படி, விண்ணப்ப இறுதி திகதி: 20-07-2019. விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய விலாசம்: பணிப்பாளர், இந்து சமய கலாச்சார திணைக்களம், 248-1/1 காலி வீதி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க