ரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றிலிருந்து சுமார் 40 ஆயிரம் வருடங்கள் பழமையான ஓநாயின் தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் செர்பியாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள திர்குட்யாக் என்ற ஆற்றின் கரையில் இருந்தே இந்த ஓநாய் தலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பவேல் என்ற நபர் திர்குட்யாக் ஆற்றின் கரையிலிருந்து இதனை கண்டெடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ஓநாயின் தலை மிகவும் வித்தியாசமான உருவ அமைப்பினை கொண்டிருந்ததால் அதனை யாகுடாவில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையத்திற்கு அப்பகுதி மக்கள் அனுப்பி வைத்தனர்.
அந்த ஓநாயின் தலையினை ஆய்வு செய்த அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் அதன் வாழ்நாள் காலம் குறித்த அடுத்தகட்ட ஆய்வுக்காக ஜப்பான் மற்றும் சுவிடன் நாட்டில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஓநாய் தலையின் மாதிரிகளை அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் குறித்த நிறுவனங்கள் ஓநாயின் தலையின் மாதிரிகளை ஆராய்ந்ததில் அது சுமார் 40 ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த பனி ஒநாயின் தலை என கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் பனியில் இருந்ததால் அதன் தலை பகுதி அழுகாமல் உரைந்து உள்ளதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கருத்து தெரிவிக்க