இலங்கை மத்திய வங்கிக்கு விசேடத்துவம் மிக்க டிஜிட்டல் முறைமைக்கான ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.
கடந்த 11 ஆம் திகதி தாமரைத் தடாகத் திரையரங்கில் நடைபெற்ற ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வழியமைத்துக் கொடுத்த சேவையினை அங்கீகரிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கிக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வை ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
கருத்து தெரிவிக்க