உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

சமய வழிபாட்டுத் தலங்களையும் அழிப்பவர்களும் பயங்கரவாதிகளே

????????????????????????????????????
மனிதர்களை கொல்பவர்கள் மட்டுமல்ல சமய வழிபாட்டுத் தலங்களையும் அழிப்பவர்களும் பயங்கரவாதிகளே.

எனவே அவர்களை இன மத மொழி பேதம் கடந்து எல்லோரும் ஒன்றிணைந்து சட்டத்தின் முன்னிறுத்தி தண்டனை வழங்குவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் 2495 ஆவது செமட்டசெவன தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்கப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான ரூபாய் 2.2 மில்லியன் செலவில் 22 வீடுகளைக் கொண்ட சியோன் மாதிரிக்கிராமத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (13) சத்துருக்கொண்டானில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைத்து விட்டு அவர் மேலும் தெரிவிக்கையில்

உடல் உள ரீதியான பாதிக்கப்பட்டு மன உழைச்சலோடு உள்ள உங்களுக்கு முழுமையாக எமது அமைச்சினால் வழங்கப்படும் வீட்டுத் திட்டம் உள்ளிட்ட நிவாரணங்களால் உங்களை ஆற்றுப்படுத்தமுடியாது ஏன நினைக்கின்றேன்

ஏனனில் நானும் சிறுவனாக இருந்தபோது எனது தந்தையை பயங்கரவாதத்தினால் இழந்ததனால் அதன் வலியைக் உணர்ந்து கொண்டவன்.

ஓவ்வோருவரம் தங்களது மதங்களையும் கலாசாரங்களையும்; மதிப்பது போன்று மற்றையவாகளின் மதங்களையும் கலாசாரங்களையும் மதிக்க வேண்டும்

அப்போது தான் அரசு முன்னெடுக்கின்ற இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்படும். பயங்கரவாதிகளின் செயல்களைப்போல் அல்லாது மனிதர்களாகிய நாம் விகாரைகள், கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களை பாதுகாக்க வேண்டும்.

தேசிய பாதுகாப்பை நோக்கி நாம் நகர வேண்டும்

அதற்கு பௌத்த,இந்து , கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மக்கள எல்லோரும் ஒன்றாய் இணைந்து பயங்கரவாத் செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்ய ஒத்துழைக்க வேண்டும்.

கடந்த காலங்களில் புலிகள் பயங்கரவாதிகள் செயல்பாடுகளுக்காக ஒட்டு மொத்த தமிழர்களையும் இந்துக்களையும் நாம் பயங்கரவாதிகளாகப் பார்க்கவில்லை.

ஒரு இனத்தில் ஒருவர் செய்யும் பயங்கரவாத செயலுக்காக அவர் சார்ந்த முழு சமூகத்தினரையும் பயங்கரவாத கண் கொண்டு பார்க்க முடியாது.

????????????????????????????????????

குறிப்பிட்ட மதத்தையோ அல்லது இனத்தையோ இழிவுபடுத்த முடியாது

இப்படிச் செயயப்போனால் வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும் அத்தோடு எல்லோரும் ஒன்று சேர்ந்து பயணித்து பயங்கரவாதிகளின் செயல்களைக் கட்டப்படுத்த வேண்டும்.

அத்தோடு எமது சுயசக்தி சேவைத்திட்டத்தில் 6 செயற்திட்டங்கள் உள்ளன இவற்றை நீங்கள் முற்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.

????????????????????????????????????

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் சீ.யோகேஸ்வரன் அலிசாகீர் மௌலானா எம்.எஸ்.எம்.அமீர் அலிஈ மட்டக்களப்பு முதல்வர் தி.சரவணபவன் மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

கருத்து தெரிவிக்க