நியூஸிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் கைது செய்யப்பட்ட பிரதான சூத்திரதாரி அனைத்து குற்றங்களுக்கும் தான் பொறுப்பல்லவென தெரிவித்துள்ளார்.
மசூதி தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி கிறிஸ்ட்சர்ச் பகுதி மசூதிகளில் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
கொலை செய்வதை நேரடியாக இணையதளத்தளத்தில் வெளியிட்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த ப்ரெண்டன் டெரென்ட் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கிறிஸ்ட்சர்ச் உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளுக்கு ஆடியோ விஷுவல் தொழிநுட்பம் வழியே ப்ரெண்டன் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார் .
இதன் போது ‘தான் அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்பேற்க முடியாதென ப்ரெண்டன் கெஞ்சுவதாக அவரது சட்டத்தரணி ஷேன் டெய்ட் தெரிவித்துள்ளார்.
ப்ரெண்டன் மீது 92 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்தவருடம் மே 4 ம் திகதி விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கேமரூன் மான்டர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க