மட்டக்களப்பு வாவியில் கடற்றொழில் அமைச்சினால் தடைசெய்யப்பட்ட 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத வலைகள் மீட்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தெரிவித்தார்.
கடற்படையினரின் உதவியுடன் இச்சட்டவிரோத வலைகள் மீட்கப்பட்டன. சந்தேக நபர்கள் தப்பிசென்றுள்ளனர். சுமார் 586 வலைத் தொகுதிகள் இதன்போது மீட்கப்பட்டன. இதன் பெறுமதி 12 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சினால் தடைசெய்யப்பட்ட டிஸ்கோ வலைகள், முக்கூட்டு வலைகள் உட்பட சிறிய கண்களைக் கொண்ட வலைகளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபடுவதால் மட்டக்களப்பு வாவியில் பல வகையான மீனினங்கள் அழிவடைந்து வருவதாக கடற்றொழல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட வலைகள் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க