இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்க செனட் சபை தெரிவித்துள்ளது.
தெற்காசிய வலய அமெரிக்காவின் அபிலாஷைகள் என்ற தொனிப்பொருளில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகள் தொடர்பான பிரதம பிரதி உதவி செயலாளர் எலிஸ் ஜீ வெல்ஸ் இது குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
தெற்காசிய வலயத்தின் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டமொன்றுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த வருடம் தேவைப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் கடல் எல்லைகளை மேம்படுத்தவும், பாதுகாப்பை அதிகரிப்பதற்கு வெளிநாட்டு இராணுவங்களுக்காக நிதி செலவிட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க