மாலைத்தீவின் இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை மற்றும் சமூக நலன் அமைச்சர் அஹமட் மஹலூப் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
விஜயராமயில் உள்ள எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளிலும் நிலவுகின்ற தற்கால அரசியல் சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இரு நாடுகளும் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்கள் பகிரப்பட்டதாக எதிர்க்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இரு நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க