வெளிநாட்டு செய்திகள்

ஜூலியன் அசாஞ்சினை நாடுகடத்துவதை நீதிமன்றமே தீர்மானிக்கும்- இங்கிலாந்து

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சினை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார்.

அசாஞ்சினை தமது விசாரணைக்காக நாடுகடத்துமாறு அமெரிக்கா கோரியிருந்த நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜூலியன் அசாஞ் மீது அமெரிக்காவில் 18 வழக்குகள் உள்ள நிலையில் அவர் அமெரிக்காவினால் தேடப்பப்பட்டு வந்தார்.

அண்மையில் லண்டலினுள்ள ஈக்குவடோர் தூதரத்தில் அசாஞ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க நாடுகடத்த கோரியது.

இதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சு சம்மதம் வழங்கியுள்ளது. எனினும் நீதிமன்றமே அசாஞ்சினை நாடுகடத்தும் முடிவினை உறுதிசெய்யும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஜூலியன் அசாஞ்சின் வழக்குவிசாரணை நடைபெறவுள்ளது.

கருத்து தெரிவிக்க