ஹொங்கொங்கில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே மோதல்
ஹொங்கொங்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஹொங்கொங் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரணை செய்வதற்கான சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹொங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் தொடந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோரை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் றப்பர் தோட்டாக்களை பயன்படுத்தியுள்ளனர். இதைதொடர்ந்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆர்ப்பாட்டத்தால் அரச அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
குறித்த சட்டம் தொடர்பான விவாதம் நேற்று முன்தினம் இடம்பெறவிருந்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றை முற்றுகையிட்டிருந்தனர். இதனால் விவாதம் பிற்போடப்பட்டது.
இவ்வாறான சட்டத்திருத்தம் ஹொங்கொங் வர்த்தக மையத்தின் சுதந்திரம் மற்றும் நம்பிக்கையை வலுவற்றதாக மற்றும் என அம்மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
கருத்து தெரிவிக்க