உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் அடுத்தக்கட்ட தாக்குதல்களை நடத்தவிருந்ததாக கூறப்படுபவர் உட்பட்ட ஐந்து பேர் சவூதியில் இருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஸஹ்ரான் ஹாசிமின் தலைமையிலான தௌஹீத் ஜமாத்தின் இராணுவ பொறுப்பாளர் என்று கூறப்பட்ட மொஹமட் மில்ஹான் உட்பட்ட ஐந்துபேரே துபாயில் இருந்து இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இதில் மில்ஹான் சவூதி வானூர்த்தி நிலையத்தில் வைத்து உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டார்.
உயிர்;த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றபோது அவர் மக்காவில் யாத்திரை சென்றிருந்தார்.
இதன்பின்னர் இலங்கைக்கு திரும்பவிருந்த இவர் சவூதி வானூர்தி நிலையத்துக்கு வந்தபின்னர் இலங்கைக்கான வானூர்தியில் ஏறவில்லை.
இதனையடுத்தே சவூதி அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்தநிலையில் அவருடன் சேர்த்து தௌஹீத் ஜமாத்துடன் தொடாபுடைய ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சவூதியுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்கீழ் இலங்கையின் காவல்துறை அதிகாரிகள் சவூதிக்கு சென்று இவர்களை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க