பிரெக்ஸிட் குழப்பங்களையும் மீறி இங்கிலாந்தில் முதலீடுகள் அதிகாறித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு முதலீடுகளைப் பொருத்தவரையில், இங்கிலாந்து தொடர்ந்து ஐரோப்பாவில் முன்னிலையில் உள்ளது.
2018-ம் ஆண்டில் 1.48 ட்ரில்லியன் பவுண்டுகள் அளவுக்கு இங்கிலாந்து முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அந்நாட்டு பொருளாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது ஐரோப்பாவின் பெரும் பொருளாதார ஜாம்பவான்களான ஜெர்மனி மற்றும், பிரான்ஸ் நாடுகள் பெற்ற முதலீடுகளை விட அதிகமாகும்.
ஜெர்மனி 739 பில்லியன் பவுண்டுகளையும், பிரான்ஸ் 649 பில்லியன் பவுண்டுகளையும் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் சர்வதேச அளவில் முதலீடுகளை ஈர்க்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனாவிற்குப் பிறகு இங்கிலாந்து மூன்றாம் இடத்தில் உள்ளது.
கருத்து தெரிவிக்க