பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து ஜனாதிபதி மைத்ரிபாலவுக்கு எதிராக செயற்படுகிறார்களா? என்ற சந்தேகம் தமக்கிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வாராந்த செய்தியாளர் சந்;திப்பின்போது நேற்று அவர் இந்த சந்தேகத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் ஏற்படும் முறுகல்கள் நாட்டுக்கு நல்லதல்ல.
எனவே ஜனாதிபதி பிரதமர் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து இந்தப்பிரச்சனைக்கு தீர்வைக்காணவேண்டும் என்றும் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்களை தடுக்கவில்லை என்று ஜனாதிபதியின் மீது குற்றம் சுமத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
கருத்து தெரிவிக்க