ஜனாதிபதி மைத்ரிபாலவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தாம் வகிக்கும் அமைச்சு பதவிகளுக்கு பதில் அமைச்சர்களை நியமிக்காமலேயே வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சி சுமத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கேஹலிய ரம்புக்வெல நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது நாடு இன்று கடினமான சூழ்நிலையில் இருக்கும் போது இரண்டு தலைவர்களும் ஒரே நேரத்தில் நாட்டில் இருந்து வெளியேறியமை ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று குறிப்பிட்டார்.
இன்று நாட்டில் உள்ள 2கோடி மக்களும் அமைதிக்காக்கின்றனர்.
அவர்களுக்கு உதவிகள் இல்லை என்ற காரணத்தினால்தான் இந்த அமைதியை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
இதேவேளை அரசாங்கத்தின் இரண்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக்கொள்ளும் நிலைபாடும் நிறுத்திக்கொள்ளப்படவேண்டும் என்றும் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க