முகத்தில் உள்ள சுருக்கங்களைப் போக்கும் அற்புதமான மருத்துவ குணம் அடங்கியது கற்றாழை .
இதன் சாறை இரவில் படுக்கும் முன் முகத்தில் தேய்த்து காலையில் எழுந்து வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நிறம் நீங்கும்.
கற்றாழை ஜெல்லுடன் பச்சை மஞ்சள் சேர்த்து பசை போல அரைத்து , முகம் . கழுத்து , கை , கால்களில் பூசி ஒரு மணித்தியாலம் கழித்து குளித்து வந்தால் உடல் பளபளப்பாகும் . தோல் நோய் வராது .
உடலில் வெப்பத்தினால் ஏற்படும் எரிச்சலை நீக்கி குளிர்ச்சி தரும் . முகத்தின் சுருக்கங்களைப் போக்கி புத்துணர்ச்சியையும் இளமையையும் தக்க வைத்துக் கொள்ள உதவும் . அத்துடன் முகத்தில் உள்ள வடுக்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் விடும் . மேலும் நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக ஊடுருவக் கூடியது . இதில் விற்றமின் சி யும் பி யும் தாதுப்பொருட்களும் நிறைந்துள்ளது . கொழுப்புச் சத்தைக் குறைக்கக் கூடிய புரோட்டின் கற்றாழையில் அதிகம் உள்ளதால் வயோதிப தோற்றத்தையும் தடுக்கின்றது .
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் . தழும்புகள் . வெயிலால் ஏற்படும் பாதிப்புகள் உலர்ந்த சருமம் போன்றவற்றிற்கு கற்றாழைச் சாறை தினமும் பூசி வர நல்ல பலன் கிடைக்கும் .
எனினும் கற்றாழையை நேரடியாக உபயோகிப்பது நல்லதல்ல . உடலில் எரிச்சலை உண்டாக்கும் . எனவே அதனுடன் சில பொருட்களையும் சேர்த்து உபயோகிக்க வேண்டும் .
முகப்பருக்கள் மறைவதற்கு கற்றாழையுடன் மஞ்சளைச் சேர்க்க வேண்டும் .
முகச்சுருக்கம் நீங்க கற்றாழையுடன் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து பூச வேண்டும் .
கருமையை போக்குவதற்கு கற்றாழையுடன் தக்காளிச் சதையையும் சேர்த்து மசித்து முகத்தில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும் .
- மேனி பளபளப்பாக மாற கற்றாழையுடன் பால் சிறிது சேர்த்து அரைத்துப் பூச வேண்டும் .
கருத்து தெரிவிக்க