விளையாட்டு செய்திகள்

இந்தியா மற்றும் நியூசிலாந்து போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான போட்டி சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நொட்டிங்காம் மைதானத்தில் நடைபெறவிருந்த லீக் போட்டியில் தோல்வியை சந்திக்காத நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் இன்று மோதவி ருந்தன.

இந்நிலையில் அங்கு மழை பெய்து வருவதால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது. நாணய சுழட்சியே மேற்கொள்ளப்படாத நிலையில், மழை தொடர்வதால்  போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தாண்டு உலகக்கிண்ண தொடரில் பல போட்டிகள், சீரற்ற காலநிலை காரணமாக ரத்து செய்யப்படுவதால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க