உள்நாட்டு செய்திகள்புதியவை

விஷேட தேவையுடையோருக்கு மாதாந்தம் 5000 ரூபாய் கொடுப்பனவு

விஷேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை இரண்டாயிரம் ரூபாயாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அவர்களுகு மாதாந்தம் வழங்கப்படும் தொகை 5000 ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த கொடுப்பனவு அதிகரிப்பு வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவுக்கு அமைவாக புதிதாக பதிவு செய்யப்படும் 40,000 பேர் அடங்கலாக விஷேட தேவைகளை கொண்ட 72,000 பேருக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க