உள்நாட்டு செய்திகள்புதியவை

மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கான அவசியம் இல்லை!

மினுவாங்கொடையில் அமைதியற்ற வகையில் செயற்பட்ட சம்பவம் தொடர்பில் பிவித்துரு ஹெல உறுமயவின் உபதலைவர் மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கான அவசியம் இல்லை என சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மதுமாதவ அரவிந்த மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று வியாழக்கிழமை புவனெக அழுவிஹாரே, எல்.லீ.பீ தெஹிதெனிய மற்றும் ப்ரீத்தி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி, குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த விசாரணை அறிக்கையை கண்காணித்த போது மதுமாதவ அரவிந்தவை கைது செய்வதற்கு போதுமான சாட்சியங்கள் இல்லை என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க