மனித உரிமைகள் விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் முதன்மை துணை உதவி செயலாளர் எலிஸ் ஜி. வெல்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை மீளமைக்க உதவுமாறு இலங்கை கோரிய நிலையில் புலன் விசாரணை ஆணையம் விசாரணைகளை தொடங்கியது .
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை புலனாய்வு செய்வதிலும் பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்கா இலங்கைக்கு துணை நிற்கிறது.
இது தொடர்பான எழுத்து மூல அறிக்கை ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான துணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திடம் இருந்து இலங்கையை மீட்பதற்கான விடயத்தில் அமெரிக்கா எவ்வாறு உதவ முடியும் என ஆராய்ந்து வருகிறது.
எவ்வாறாயினும் சிறுபான்மையினருக்காகவும் அகதிகள் மற்றும் புகலிட கோரிக்கையாளர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் அமெரிக்கா தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க