வடக்கு செய்திகள்

வரலாற்று சிறப்பு மிக்க காட்டுவிநாயகர் ஆலய கருவறைக்கான சங்குஸ்தாபனம்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியில் உள்ள காட்டு விநாயகர் ஆலயத்தின் மூலஸ்தானம் சங்குஸ்தாபன அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது .

ஆலய நிர்வாகத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியுமான க.பரஞ்சோதி தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம், மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உட்பட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலயம், கி.மு.1506 ஆம் ஆண்டிற்கு முற்பட்டதும் ஆறாம் பரராஜ சேகர மன்னரால் புனர்நிர்மானம் செய்யப்பட்டு வழிபடப்பட்டதுமாகும் ,7 நாட்கள் தொடர்ச்சியாக அணையா விளக்கு எறிவது இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.

 

கருத்து தெரிவிக்க