ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 19 ஆவது கூட்டம் நாளை தஜிகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது. இதில் சீன ஜனாதிபதியும் பங்கேற்கவுள்ளார்.
இதன்போதே மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளது என்றும், இதற்கான ஏற்பாட்டை இரு நாட்டு தூதரகங்களும் மேற்கொண்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மாலைதீவுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு அண்மையில் இலங்கைக்கு குறுகியகால பயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேச்சுகளை நடத்தியிருந்தார்.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதி மைத்திரியை ,சீன ஜனாதிபதி தஜிகிஸ்தானில் வைத்து பிரத்தியேகமாக சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
கருத்து தெரிவிக்க