மஸ்கெலிய சாமிமலை காட்மோர் போன்ற பிரதேசங்களுக்காக வழங்கப்பட்டுள்ள பேருந்து சேவையை அப்பகுதி பாடசாலை மாணவர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மஸ்கெலி நகரிலிருந்து சாமிமலைக்கு செல்லும் மதியநேர பஸ் சேவை 1 .45 மணியளவில் அப்பாதையூடாக பயணிக்கிறது. அசாதாரண சூழ்நிலையால் பாடசாலை விடுமுறை பிற்போடப்பட்டிருந்த நிலையில் 3 மணி வரையில் தற்போது பாடசாலை இடம்பெறுகிறது. இதனால் குறித்த பஸ் சேவையினை பெற முடியாமல் உள்ளதென மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சேவையில் ஈடுபட்டு வரும் பேருந்து சேவை பயன்படாத வகையிலே ஈடுபட்டு வருகிறதாகவும் ஆசிரியர்களும் சுட்டிகாட்டுகின்றனர்.
அதேபோன்று மஸ்கெலிய காட்மோர் பகுதிக்கு சேவையில் ஈடுபட்டுள்ள இ . போ . ச பேருந்தும் இவ்வாறே செயல்படுவதாகவும் மக்கள் சுட்டிகாட்டுகின்றனர் .
இப்பிரதேசத்தில் முறையான பஸ் சேவை இன்றி பல்வேறுபட்ட சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அறிவர். எனினும் இது குறித்து நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை என பொது மக்களால் மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க