வெளிநாட்டு செய்திகள்

மீள்சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கனடா தடை

ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்போவதாக கனடா அறிவித்துள்ளது.

அந்நாட்டு என பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ இதனை அறிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு முதல் கனடாவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடைவிதிக்கப்படும்.

கனடாவில் 10 சதவீதத்துக்கும் குறைவான பிளாஸ்டிக்குகளே மறுசுழற்சி செய்யப்படுகிறன. ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சத்துக்கும் அதிகமான பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிப்புக்கு உள்ளாகின்றன” என பிரதமர் மேலும் கூறினார்.

கனடா உலகிலேயே மிக நீண்ட கடல்பாதையை கொண்ட நாடாக காணப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க