உள்நாட்டு செய்திகள்புதியவை

5 ஆலோசகர்களை அவசரமாக நியமிக்கிறார் மைத்திரி!

 
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகராக கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாசவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என சுதந்திரக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அடுத்தவாரமளவில் இதற்கான நியமனம் கடிதம் அவருக்கு கையளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை, சர்வ மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு ‘ஜனாதிபதி ஆலோசகர்’களை நியமிப்பதற்கும் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
மத விவகாரங்கள் தொடர்பான அனைத்து அமைச்சுகளும் ஐக்கிய தேசியக் கட்சி வசமிருப்பதால், மத விவகாரம் தொடர்பான தகவல்கள் ஜனாதிபதிக்கு உரிய வகையில் கிடைப்பதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையடுத்தே நான்கு மதங்களுக்கும் நால்வரை ஆலோசகராக நியமிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க