வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க-இந்திய வர்த்தகம் உயர்ந்துள்ளது-மைக் பொம்பியோ

கடந்த ஆண்டில் மாத்திரம் இந்திய-அமெரிக்க வர்த்தகம் ஏழு மடங்கு அதிகரித்து 142 பில்லியன் டொலர்களாக உயர்ந்திருப்பதாக அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோ குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் நடைபெற்ற இந்தியா தொடர்பான மாநாட்டில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா தகவல்தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் உலகை தலைமையேற்று செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய-அமெரிக்க வர்த்தக உறவால் பல இலட்சம் இந்தியர்கள் வறுமைக்கோட்டிலிருந்து உயர்த்தப்பட்டிருப்பதாகவும் இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

இரு நாடுகளும் ஒரே விதமான கொள்கைகளுடன் திகழ்கின்றன என்றும், பிரதமர் மோடி மகத்தான வெற்றியுடன் மீண்டும் ஆட்சி அமைத்திருப்பது மக்கள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்றும் மைக் பொம்பியோ தமது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோ, இந்த மாதம் இந்தியா மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க