புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீனாவில் இயற்கை சீற்றம்- இதுவரையில் 61 பேர் உயிரிழப்பு

சீனாவில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் இதுவரையில் 61 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 8 மாகாணங்களில் 45 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

தெற்குப் பகுதியில் உள்ள குவாங்ஸி (Guangxi) பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தினால் அதிகளவான மகிழூந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டன. மேலும் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவும் ஏற்பட்டது.

 

கருத்து தெரிவிக்க