உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நீராவியடி பிள்ளையார் ஆலய கட்டுமானங்களின் நிலைமைகள் வீடியோ பதிவு

அமைச்சர் மனோ கணேசனின் உத்தரவுக்கு அமைவாக பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள சடடவிரோத விகாரை கட்டுமானங்களின் தற்போதைய நிலைமைகள் இன்று அரச அதிகாரிகளால்   வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது

நேற்றையதினம்(10) தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகைதந்து சர்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் விகாரை அமைக்கப்ட்டுள்ள விவகாரம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார் .

இந்த சந்திப்பின்  தொடர்சியாக   குறித்த சர்ச்சைக்குரிய காணியில் எந்தவொரு தரப்பும் பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியின்றி எந்தவித கட்டுமான பணிகளையும் செய்ய கூடாது.

அதேவேளை பிரதேச சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதியுடன் எந்தவொரு தரப்பும் கட்டுமான பணிகள் செய்ய முடியும்.இந்த  நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம்  செயற்படுமாறும் தீர்ப்பில் திருப்தி இல்லாத விகாரையின் பெளத்த தேரர் அவசியமானால் மேன்முறையீடு செய்யலாம். ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி இனி கட்டுமான பணிகள் செய்ய முடியாது என தெரிவித்தார் .

அத்துடன் முல்லைத்தீவு பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரட்ன, பொலிஸ் அத்தியட்சகர் சேனாநாயக்க மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி கங்கநாத் ஆகியோர் குறித்த விடயத்தில் நடுநிலையாக கண்காணிக்க வேண்டும்.

எனவும்  மாவட்ட செயலக  அதிகாரிகள்  சகல தரப்பினருடனும்  சர்சைக்குரிய நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு நேரடி விஜயம் செய்து தற்போதுவரை அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகள் தொடர்பாக காணொளி பதிவுகளை எடுத்து  அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும்   அமைச்சர் மனோ கணேசன் உத்தரவிட்டிருந்தார் .

அமைச்சரின் இந்த உத்தரவுக்கு அமைவாக  இன்றையதினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் உமாமகள் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க தவராசா  மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் இணைந்து பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதிக்கு சென்று காணொளி பதிவுகளை மேற்கொண்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அமைச்சரின் உத்தரவின் பேரில் இவ்வாறு கண்காணிப்பு பணிக்கு சென்ற அரச அதிகாரிகளை பொலிசார் பெயர்களை கேட்டு பதிவுகளை மேற்கொண்டிருந்தனர் .

கருத்து தெரிவிக்க