ஒரு ரத்ன தேரர் இறந்துவிடுவார் என்பதற்காக அவரின் கோரிக்கைகளை நிறைவேற்றமுடியுமானால், பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஏன் எமது பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்று முல்லைத்தீவின் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
செய்தியாளர்களிடம் தமது போராட்டம் குறித்து தெளிவுப்படுத்தும்போதே அவர்கள் இந்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.
இந்த நாட்டில் ஒரு ரத்தின தேரர் இறந்துவிடுவார் என்பதற்காகவும், குழப்பம் ஏற்பட்டுவிடும் என்பதற்காகவும் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் தலைமைகள் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து அவர்களைப் பதவி நீக்கி பிரச்சினையை தீர்க்கப்பட்டுள்ளது.
எனினும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக அழுது கொண்டு, எமது உறவினர்களை தொலைத்துவிட்டு ஏதிலிகளாக நாங்கள் திரிகின்றோம்.
இதற்கு ஏன் இன்னும் ஒரு தீர்வினை அரசாங்கத்;தினால் பெற்றுத்தரவில்லை என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இன்றுடன் 900 நாட்களை நோக்கி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களான நாம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
எனினும் உள்நாடோ சர்வதேசமோ எங்களைப் பார்க்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க