முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சித்திரை மாதம் 7ம் திகதி நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உடைய போராட்டத்தின் போது செல்வபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒளிந்திருந்து புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்திய கடற்படை வீரர் தொடர்பாக இன்று வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இடம்பெற்றது
வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுடைய பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த இடமான வட்டுவாகல் பாலம் வரை கடந்த 7ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள்
இதன்போது செல்வபுரம் பகுதியில் பேருந்து தரிப்பிடத்தில் ஒளித்து நின்ற சிவில் உடையில் இருந்த ஒருவர் குறித்த போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்தார்
இந்நிலையில் குறித்த நபர் பல்வேறு பொய்யான தகவல்களை கூறியதோடு அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்லமுற்பட்ட போது அங்கு நின்றவர்கள் பிடிக்கப்பட்டு விசாரித்தபோதுதான் கடற்படையைச் சேர்ந்தவர் என தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த நபர் கடற்படையைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தி அங்கு நின்ற பொலிசாரிடம் அவர்கள் கையளித்திருந்தனர்.
இருப்பினும் அந்த இடத்தில் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காது அவரை விடுவித்தனர்.
பின்னர் குறித்த கடற்படை சிப்பாய் வைத்தியசாலையில் சென்று ஊடகவியலாளர் தவசீலன் தன்னை தாக்கியதாக தெரிவித்துமுறைப்பாடு பதிவு செய்திருக்கிறார்.
இந்நிலையில் ஊடகவியலாளர் தவசீலனை முல்லைத்தீவு பொலிசார் விசாரணைக்கு அழைத்து வழக்கும் தொடர்ந்தனர்
இந்நிலையில் குறித்த நபரின் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்தியகாரியாலயத்தில் செய்த முறைப்பாட்டுக் அமைவாக இன்றைய தினம் விசாரணைகள் இடம்பெற்றன.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி சட்டத்தரணி லீனஸ் வசந்தராஜாவின் தலைமையிலே இந்தவிசாரணைகள் இடம் பெற்றன.
இந்த விசாரணைகளின் போது கடற்படையினர் குறித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு தங்களால் எந்தவிதமான அச்சுறுத்தலும் இனிவரும் காலங்களில் வழங்கப்படாது என உறுதிமொழி அளித்தனர்.
ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிசார் திட்டமிட்டு அநீதி விளைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது
இந்தநிலையில் அது தொடர்பான அனைத்து சாட்சியங்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறும் அது தொடர்பாக தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி அறிவித்தார்.
கருத்து தெரிவிக்க