நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் டெங்கு நுளம்பு பரவ வாய்ப்புக்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் காலி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, குறித்த மாவட்டங்களில் இன்று முதல் விஷேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் விஷேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் டெங்கு நுளம்பு அதிகம் பரவும் மாவட்டங்களுக்கு விஷேட வைத்திய நிபுணர் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் டெங்கு நுளம்பு பரவாத வகையில் சூழலை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க