உள்நாட்டு செய்திகள்வணிக செய்திகள்

இலங்கை பொருளாதாரம் தகர்ந்து விடவில்லை-மத்திய வங்கி ஆளுநர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் இலங்கை பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதேயன்றி தகர்ந்துவிடவில்லை என மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார் ‘

வெளிநாட்டு நிதி முகாமையாளர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

21 ஏப்ரல் தாக்குதல்கள், சுற்றுலாத்தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, ஆனால் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விவசாயம் போன்ற பொருளாதாரத்தின் உற்பத்தி திறனை பாதிக்கவில்லை.

இலங்கையின் கடந்தகால பின்னடைவை மீளமைக்க வேண்டியுள்ளது. மாதங்களில் மாதங்களில் பொருளாதாரத்தை வலுவான நிலைக்கு கொண்டு செல்ல முடியும். இருப்பினும் உணர்வுகள் மற்றும் நம்பிக்கை மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது என அவர் கூறினார்.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4% ஆக இருப்பதாகவும் 21 ஏப்ரல் தாக்குதல்களுக்குப் பின்னர் அது 3% ஆக குறைந்துள்ளது. இது, 3 .28  வீதம் எனும் 2018 ஆம் ஆண்டு வளர்ச்சி வீதத்தில் சிறு வித்தியாசமே என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க