விளையாட்டு செய்திகள்

தகுதி இருந்தும் தடுக்கப்பட்டதாக ஆப்கான் வீரர் முறைப்பாடு

உடல் தகுதியுடன் இருந்தும் சதி செய்து உலக கிண்ணப்போட்டிகளில் இருந்து தன்னை நீக்கி விட்டதாக, ஆப்கானிஸ்தான் வீரர் ஷாசத் குற்றம் சுமத்தியுள்ளார்

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருந்த விக்கெட் காப்பாளர்; மற்றும் துடுப்பாட்டவீரர் முகமது ஷாசத், அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டங்களில் ஆடினார்.

நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 8-ந் திகதி நடந்த லீக் ஆட்டத்திற்கு முன்பாக உடல் தகுதியுடன் இல்லை என்று கூறி அவர் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இந்தநிலையிலேயே அவர் தமது முறைப்பாட்டை ஆப்கானிஸ்தான் கிரிக்கட் சபைக்கு செய்துள்ளார்.

கருத்து தெரிவிக்க