வெளிநாட்டு செய்திகள்

ஈராக்கில் உள்ள இராணுவ வீரர்களை மீளப்பெற நியூசிலாந்து திட்டம்

ஈராக்கில் உள்ள இராணுவ படைகள், அடுத்த ஆண்டுக்குள் மீளப்பெறப்படுவர் என நியூசிலாந்து அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் ஜசிண்டா ஆர்டன் நேற்று (Jacinda Ardern) தெரிவித்தார்.

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை ஒழிப்பதற்காக நியூஸிலாந்து ராணுவ படையினர் ஈராக் தற்காப்பு அதிகாரிகளுக்கு கடந்த 4 ஆண்டுகளாக பயிற்சி அளித்தனர்.

பயிற்சிமூலம் கிட்டத்தட்ட 44,000 ஈராக்கிய வீரர்கள் பயனடைந்துள்ளனர்.
ஈராக்கில் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் குறைந்துவருவதால் படைகளை மீளப்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

95 நியூஸிலாந்து வீரர்கள் ஈராக்கில் இருக்கின்றனர். அவர்கள் கட்டம்கட்டமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் தாயகம் திரும்புவார்கள் என பிரதமர் ஜசிண்டா மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க