வடகொரியாவில் இராணுவ புரட்சி நடத்த முயன்ற முன்னாள் இராணுவ தளபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பிரானா மீன்களுக்கு இரையாக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக பிரித்தானியாவின் உளவுத்தரப்பு தகவலை வெளியிட்டுள்ளது
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தந்தையின் மறைவுக்கு பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கிம் ஜாங் அன், இதுவரை அரசில் உயர் பதவி வகிக்கும் 16 பேருக்கு மரண தண்டனை அளித்து இருக்கிறார்.
இந்தவகையிலேயே இராணுவப்புரட்சி ஒன்றுக்கு ஆயத்தம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் முன்னாள் இராணுவ தளபதியை மாமிச விரும்பிகளான பிராணா மீன்களுக்கு இரையாக்கி மரண தண்டனையை அவர் நிறைவேற்றியதாக பிரித்தானிய உளவுச்சேவை குறிப்பிட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க