நகங்கள் உறுதியற்று உடைவதற்கு பிரதான காரணிகள் இரும்பு மற்றும் கல்சியம் போன்ற சத்து குறைபாடாகும். அத்துடன் நகங்களை சரியான முறையில் பராமரிக்க தவறுவது . இதற்கு சில எளிய வழி முறைகளை பின்பற்றுவதுடன் சத்தான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும் .
நகங்களை வெட்டும் போது நகத்தின் மேல் எண்ணெயை தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால் , அழகாகவும் விரும்பும் வடிவத்திலும் வெட்டலாம்.
தண்ணீரை மிதமான சூடாக்கி சிறிது உப்பு கலந்து , அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் , விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
சிலருக்கு நகங்கள் கடினமாக இருக்கும். அவ்வாறானவர்கள் குளித்ததும் ஈரத்தன்மையுடன் வெட்டினால் , இலகுவாக வெட்ட முடியும்.
நகங்கள் உடையாமல் பாதுகாப்பதற்கு சிறிதளவு பேபி ஒயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்திருந்தால் நகங்கள் உறுதியாகும்.
எலுமிச்சைச் சாறுடன் சிறிது கிளிசரின் கலந்து அதனை நகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து பின் கழுவினால் நகங்கள் பளபளக்கும். இவ்வாறு மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கருத்து தெரிவிக்க