அவசரக்கால சட்டம் அரசியலமைப்பை மீறுகிறது என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைமீறல் மனுக்களின் விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்றம் இந்த தீர்மானத்தை இன்று அறிவித்தது.
மாற்றுக்கொள்கைகளுக்கான அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து. பிரஜைகள் முன்னணியின் காமினி வியாங்கொட ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களில் ஜனாதிபதி, சட்டமாஅதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனுக்கள், நீதியரசர்கள்- பிரசன்ன ஜெயவர்த்தன,முர்து பெர்ணான்டோ மற்றும் எஸ் துரைராஜா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் அமர்வில் விசாரணை செய்யப்படுகின்றன.
கருத்து தெரிவிக்க