ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடாத்தப்பட்டால், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளிடம் மீண்டும் கையேந்தும் நிலை உருவாகும் எனவும், இந்நிலைக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைத்தால், அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பாக அமையும். அரசாங்கம் இருக்கும் நிலையில் தேர்தலுக்கு செல்வது அவர்களுக்கு களநிலைமைகளை சாதகமாக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தினால், சிறுபான்மை கட்சியின் பின்னால் செல்ல வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது. இன்று ஐக்கிய தேசியக் கட்சியை ரவுப் ஹக்கீமும், ரிசாட் பதியுத்தீனும் ஆட்டுவதை முழு நாடும் அறிந்தே வைத்துள்ளது.
இதனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றுக்குச் செல்வதை நாம் எதிர்க்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவானதை தாம் செய்ய வேண்டியதில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சகோதர தேசிய நாளிதழொன்றுக்கு அவர் வழங்கியுள்ள நீண்ட செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க