ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் இந்திய பிரதமர் மோடியை, சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் சந்திக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீன செய்தி நிறுவனங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. இதில், சீன அமெரிக்க நாடுகளுக்கிடையிலான வர்த்தகப்போர் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் வர்த்தகப்போர் வெடித்துள்ள நிலையில் அமெரிக்கா, தனது முன்னுரிமை வர்த்தக நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவையும் நீக்கியுள்ளது.
இவ்வாறான நிலையில் இந்திய பிரதமர் மற்றும் சீன ஜனாதிபதி சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக குறித்த செய்தி நிறுவனங்கள் சுட்டிகாட்டியுள்ளன.
எதிர்வரும் ஜூன் 13 மற்றும் 14 இல் கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகர் பிஸ்கக்கில், ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.இதில் ஷாங்காய் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கருத்து தெரிவிக்க