கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை அபிவிருத்தி செய்வதாகக் கூறி அதனை ஜப்பானுக்கும் மற்றும் இந்தியாவிற்கும் வழங்குவது தொடர்பில் இப்போதே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொதுசேவை சங்கம் தெரிவித்திருந்தது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்தது இந்த ஒப்பந்தத்தினாலா என ஆராய்ந்து பார்க்கவேண்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி சந்தேகம் எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இந்திய பிரதமர் மோடியின் திடீர் விஜயம் மற்றும் துறைமுகத்தின் கிழக்கு முனை ஒப்பந்தம் தொடர்பிலான உண்மை நிலைமை குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க கூறுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வந்தது உலகத்திற்கு ஒரு செய்தியை சொல்வதற்கே எனவும், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை இந்தியாவிற்கு விற்றதாகக் கூறப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க