புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தியாவில் மூன்று வயதில் இருந்தே கட்டாய கல்வி!

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மூன்று வயதில் இருந்தே குழந்தைகளுக்கு கட்டாய கல்வி திட்டத்தை இந்திய மத்திய அரசு நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.

இந்தியாவில் தற்போதைய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஐந்து வயதில் இருந்து கட்டாய கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.

இதை மாற்றி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரைவு அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது.

இதன்படி கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 3 வயதில் இருந்தே கட்டாய கல்வி கற்றுக் கொடுக்கும் திட்டத்தை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க