வேலைவாய்ப்புக்காக குவைட் சென்ற 41 இலங்கை பணியாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவர்கள் இன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 29 இளைஞர்கள் பத்து நாட்களாக குவைட்டில் தடுத்து வைக்கப்பட்டு இன்று அதிகாலை 2.10 மணியளவில் கட்டார் விமானச் சேவையின் கியூ.ஆர். 668 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கடந்த 31ம் திகதி இலங்கையிலிருந்து குவைட்டுக்கு உணவு தயாரிக்கும் பணி நிறுவனமொன்றுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிளோட்ட பணியாளர்களாக அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
இதற்கு முன்னர் இவ்வாறு 30 பணியாளர்கள் இதே தொழிலுக்காக கடந்த 04ம் திகதி குவைட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை ஒருநாள் மாத்தரமே தங்கை வைத்து 5ம் திகதி அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை மேலும் 59 இளைஞர்கள் அடங்கிய குழுவொன்று குவைட்டுக்கு பணியாளர்களாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் கொழும்பு, பதுளை, மன்னார், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் 15 பேர் முஸ்லிம்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இவர்களில் 44 பேர் சிங்களவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க