வெளிநாட்டு செய்திகள்

பார்ப்பவற்றை தத்ரூபமாக வரையும் அய் டா ரோபோ

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய அய் டா எனும் ரோபோ கண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

பெண் உருவம் கொண்ட அய் டா ரோபோ இங்கிலாந்தின் கார்ன் வோல் எனும் பகுதியில் கண்களைச் சிமிட்டியபடி அதற்கு பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் படங்களை வரைந்து வருகிறது.

படங்களை வரைதல், நிறமூட்டுதல் காணொளி ஓவியம் உட்பட சித்திரத்தில் பல்வேறு நுட்பங்களையும் இந்த ரோபோ செய்து வருகிறது.

உலகின் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய ரோபோவான இதனை மனிதர்களுக்கு நிகராகச் செயல்பட வைப்பதே தங்களின் குறிக்கோள் என்று அய் டாவின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அய் டா வரைந்த ஓவியம் ஒன்று இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க