சினிமா

உண்மைகளை வெளியிட்ட திரையரங்குகளின் உரிமையாளர் சங்க தலைவர்

கடந்த 3 வருடங்களில் தமிழ் திரை உலகின் முன்னணி 10 கதாநாயகர்கள் என்று கூறிக்கொள்ளும் நடிகர்களின் 80% படங்கள் தோல்விபடங்கள் என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் படுதோல்வியடைந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த வருடம் மட்டுமல்ல கடந்த 3 வருடங்களில் பஞ்ச் பேசி, கார்களை பறக்கவிட்ட முன்னனி நடிகர்கள் நடித்த படங்களில் 80 சதவீதம் தோல்வி படங்கள் தான் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் .

அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், சூர்யாவின் என்.ஜி.கே, விஷாலின் அயோக்யா போன்ற படங்கள் ஒரு வாரமேனும் திரையரங்குகளில் தாக்குபிடிக்கவில்லை.

கதாநாயகர்கள் வாங்கும் அதிகப்படியான சம்பளம் தமிழ் திரை உலகை அழிவுப்பாதைக்கு அழைத்து செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.

கருத்து தெரிவிக்க