நம் கண்கள் மிகப் பிரதானமானது. அகத்தின் அழகை பிரதிபலிப்பதும் கண்களே நம்முடைய வாழ்க்கை முறையினால் பாதிப்படைபவற்றில் கண்களும் ஒன்று. கண்கள் சோர்வடைதல் , கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுதல் , பார்வை மங்குதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம். இவற்றை தவிர்க்க சில எளிய வழிகளைப் பின் பற்றினாலே போதும்.
- ஆப்பிளை சிறு துண்டுகளாக வெட்டி தேனில் நனைத்து சாப்பிட்டு வந்தால் கண்கள் அழகுடன் பிரகாசமாகவும் இருக்கும்.
- ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளுடன் எலுமிச்சைச் சாறு அல்லது தோடம்பழச் சாறு விட்டு , அதனுடன் பன்னீர் இரண்டு சொட்டுகள் விட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். கண்களை நன்றாகக் கழுவியதும் கலவையைப் பூசி நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரால் கழுவி விடவும். இதனை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்து வந்தால் கண்கள் அழகுடன் இருப்பதுடன் , கருவளையமும் மறைந்து விடும்.
- உருளைக்கிழங்கின் தோலைச் சீவி அரைத்து அதனுடன் தேன் கலந்து கண்களைச் சுற்றி பூசி வந்தாலும் கண்கள் அழகு பெறும்.
- வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பேபி ஒயிலை கண்களைச் சுற்றி பூசி வந்தாலும் கண்கள் அழகுடன் திகழும்.
கருத்து தெரிவிக்க