உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் இலங்கைக்கு நாடு ஒன்றின் தலைவர் வருகைத்தரும் நிகழ்வு இன்று இடம்பெறுகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியே அவராவார்.
இன்று முற்பகல் இலங்கைக்கு வரும் அவர் இன்று பிற்பகல் வரை இலங்கையில் குறுகியக்காலம் தங்கியிருந்து மீண்டும் தாயகம் திரும்பவுள்ளார்.
மாலைத்தீவில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் வழியிலேயே இந்த பயணம் அமைகிறது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் தமது தோழமையை எடுத்துக்காட்டுவதாகவே மோடியின் பயணம் அமைவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மோடியின் வருகையை முன்னிட்டு முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் வரை காலி வீதியுடன் இணைந்த கட்டுநாயக்க அதிவே பாதையின் போக்குவரவுகள் கட்டுப்படுத்தப்படவுள்ளன.
இந்திய பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் குறுகியக்காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், தமிழ்தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
கருத்து தெரிவிக்க